எதிர்நீச்சலில் வேல ராமமூர்த்தியின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு?
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக களமிறங்கும் நடிகர் வேல ராமமூர்த்தியின் சம்பள விபரம் வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் சொத்தில் 40 சதவீதம் ஷேர் ஜீவானந்தம் பெயரில் இருக்கின்றது.
ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி வீட்டில் அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
குறித்த சீரியல் பயங்கர எதிர்பார்ப்பில் சென்று கொண்டிருந்த தருணத்தில் சீரியலின் கதாநாயகன் குணசேகரன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
வேல ராமமூர்த்தி
ஆதி குணசேகரனின் மறைவிற்கு பின்பு அவரது கதாபாத்திரத்தில் ஏற்ற நடிகரை தேடி வந்த நிலையில், தற்போது வேல ராமமூர்த்தி ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆதி குணசேகரன் இல்லாமல் சீரியலை கொண்டு செல்ல மிகவும் கஷ்டப்பட்ட இயக்குனர் ஒருவழியாக தேடி கண்டுபிடித்து கொண்டு வந்துள்ளார்.
வேல ராமமூர்த்தி பன்முக திறமை கொண்டனர். எழுத்தாளர், நாவலாசிரியர், குற்றப்பரம்பரை, குருதி ஆட்டம், பட்டத்து யானை கதைகளை எழுதிய இவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பெருநாழி ஊராட்சியை சேர்ந்தவர் ஆவார்.
ஆதிகுணசேகரனாக நடித்த மாரிமுத்துவிற்கு ஒருநாளைக்கு 20 ஆயிரம் ஊதியமாக கொடுக்கப்பட்டு வந்த நிலையில், வேல ராமமூர்த்திக்கு அதுவே இரண்டு மடங்காக கொடுக்கப்படுகின்றதாம்.
ஆம் ஒரு நாளைக்கு 40 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெறுகின்றார். சீரியலில் நடிகர், நடிகர்களிடையே அதிக ஊதியம் வாங்கும் நபராக வேல ராமமூர்த்தி காணப்படுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |