செயலிழந்த குணசேகரனின் கை, கால்கள்.. I feel sorry mama! நந்தினியின் அல்டிமேட்
எதிர்நீச்சல் சீரியலில் அனைவருக்கும் பிடித்தமான நடிகராக வலம்வரும் குணசேகரன் தற்போது கை கால்கள் செயலிழந்து மருத்துவமனையில் பரிதாபநிலையில் காணப்படுகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் 40 சதவீதம் ஷேர் தற்போது ஜீவானந்தத்திற்கு சென்றுள்ளது.
இதனை சற்றும் எதிர்பார்க்காத குணசேகரன், ஜனனி பெரும் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர். காவல்நிலையம் வரை சென்றும் ஜீவானந்தம் பக்கமே ஆதாரம் உள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குணசேரகன் இருக்கும் வீடும் ஜீவானந்தத்திற்கு செல்ல இருப்பதை நினைத்து, கடும் அதிர்ச்சியில் காணப்பட்டவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு தற்போது கை கால்கள் செயலிழந்து காணப்படுகின்றது.
இந்த நேரத்தில் நந்தினி அல்டிமேட்டாக தனது ஸ்டைலில் ஆங்கிலத்தில் பேசி அசத்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |