மாரிமுத்துவிற்கு பதிலாக எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கவிருக்கும் நடிகர் யார்? வெளியான பரபரப்பு தகவல்
எதிர்நீச்சல் சீரியலில் மறைந்த மாரிமுத்து நடித்த குணசேகரன் கதபாத்திரத்திற்கு பதிலாக பிரபல நடிகரிடம் பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறப்படுகின்றது.
நடிகர் மாரிமுத்து
பிரபல இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து திடீர் மாரடைப்பினால் நேற்று காலை உயிரிழந்த நிலையில், அவரது உடல் சொந்த ஊரான தேனியில் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு அரசியல் தலைவர்களுக்கும், பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர் மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்தது தான் மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுத் தந்தது.
தற்போது குறித்த கதாபாத்திரம் இனி என்னவாகும் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. மாரிமுத்துவைப் போன்று மிரட்டலாக தோரணையில் வலரும் நடிகருடன், பிரபல எழுத்தாளருமான வேல.ராமமூர்த்தியை நடிக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாரிமுத்துவின் இறுதி நிமிடங்கள் இப்படித்தான்... வெளியான சிசிரிவி காட்சியைப் பார்த்து கலங்கும் ரசிகர்கள்
மேலும் குணசேகரன் கதாபாத்திரத்திற்கு ஈடாக இவர் தான் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் குறித்த நடிகர் சினிமாவில் நடித்துள்ள நிலையில், சின்னத்திரையில் இதுவரை நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |