மாரிமுத்துவின் இறுதி நிமிடங்கள் இப்படித்தான்... வெளியான சிசிரிவி காட்சியைப் பார்த்து கலங்கும் ரசிகர்கள்

Rinosharai
Report this article
மூச்சுதிணறல் ஏற்பட்டவுடன் தானோ காரை செலுத்தி மருத்துவமனைக்கு சென்ற மாரிமுத்துவின் இறுதி நிமிடங்கள் சிசிரிவி காட்சியில் பதிவாகி அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.
மாரிமுத்துவின் மரணம்
எதிர்நீச்சல் சீரியல் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் மாரிமுத்து நேற்றைய தினம் 10 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இவர் பல திரைப்படங்களில் துணை நடிகராகவும், துணை இயக்குனராகவும் சினிமாவில் பலருக்கும் பிரபலமானவர். மேலும், இவர் அண்மைக்காலமாக மிகவும் பிரபலமாகியிருந்தார் ஏனெனில் அவர் நடித்து வந்த எதிர்நீச்சல் சீரியலில் அவரின் நடிப்பு பலருக்கும் பிடித்து போக அவரின் ரசிகனாக மாறியிருக்கிறார்.
இந்நிலையில், அவரின் இறுதி மூச்சுக் கூட இந்த சீரியலுக்காகத்தான் விட்டிருக்கிறார். எதிர்நீச்சல் சீரியலுக்கு டப்பிக் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. அந்த சமயத்தில் யாரையும் எதிர்பார்க்காமல் தானே காரை செலுத்தி சென்றிருக்கிறார்.
அது தான் இவரின் இறுதி நிமிடமாக இருக்கிறது. அந்த சிசிரிவி காட்சி தற்போது வெளியாகியிருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |