கடிதம் எழுதிவைத்து சென்ற குணசேகரன்... சீரியலிலிருந்தும் நிரந்தரமாக விடைபெற்ற மாரிமுத்து
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி மகனுக்கு பைக் எடுத்துக் கொடுத்த நிலையில், வீட்டில் குணசேகரன் கோபத்தில் அங்கும் இங்கும் நடக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் சொத்தில் 40 சதவீதம் ஷேர் ஜீவானந்தம் பெயரில் இருக்கின்றது.
ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி வீட்டில் அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
குணசேகரன் மறைவு
குறித்த சீரியல் பயங்கர எதிர்பார்ப்பில் சென்று கொண்டிருந்த தருணத்தில் சீரியலின் கதாநாயகன் குணசேகரன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
இவர் மறைந்த பின்பு ரிவியில் வந்த அவரது குரல் மற்றும் காட்சியை அவதானித்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.
கடந்த நாளில் குணசேகரன் வராமல் இருந்த நிலையில், தற்போது மாஸ் எண்ட்ரி கொடுத்ததுடன், கோபத்தில் அங்கும் இங்கும் நடந்த காட்சி நேற்று வெளியானது.
மேலும் சீரியலின் கதையில் வீட்டில் உள்ள அனைவரும் குணசேகரனை எதிர்த்ததால் மனம் வருத்தப்பட்டு அறைக்குள் இருப்பது போன்று காட்சிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் கடிதம் எழுதி வைத்துவிட்டு குணசேகரன் வீட்டைவிட்டு சென்றுள்ளது காட்டப்பட்டுள்ளது.
குணசேகரன் உயிரிழந்ததை தாங்கமுடியாமல் சீரியலில் ஞானம் உண்மையிலேயே அழுதுள்ளது கண்கலஙக வைத்துள்ளது. இதுவரை சீரியலில் சில இடங்களில் வந்திருந்த குணசேகரன் தற்போது முற்றிலும் விடைபெறுவதை நினைத்த மக்கள் பெரும் கஷ்டத்தில் காணப்படுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |