கடும் கோபத்தில் அங்கும் இங்கும் நடந்த குணசேகரன்... வெளியான அடுத்த காணொளி
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி மகனுக்கு பைக் எடுத்துக் கொடுத்த நிலையில், வீட்டில் குணசேகரன் கோபத்தில் அங்கும் இங்கும் நடக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் சொத்தில் 40 சதவீதம் ஷேர் ஜீவானந்தம் பெயரில் இருக்கின்றது.
ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி வீட்டில் அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
குணசேகரன் மறைவு
குறித்த சீரியல் பயங்கர எதிர்பார்ப்பில் சென்று கொண்டிருந்த தருணத்தில் சீரியலின் கதாநாயகன் குணசேகரன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
இவர் மறைந்த பின்பு ரிவியில் வந்த அவரது குரல் மற்றும் காட்சியை அவதானித்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்து வருகின்றனர். கடந்த நாளில் குணசேகரன் வராமல் இருந்த நிலையில், தற்போது மாஸ் எண்ட்ரி கொடுத்ததுடன், கோபத்தில் அங்கும் இங்கும் நடந்து வருகின்றார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் குணசேகரன் காட்சி அடுத்தும் வரவிருக்கினறதா? என்ற எதிர்பார்ப்புடன் சிலர் காத்திருந்தாலும், மறைந்த குணசேகரனை வைத்து பிரபல ரிவி சீரியல் டிஆர்பி- யை ஏற்றுவதற்கு இதனை செய்வதாக கொந்தளித்தும் வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |