மாரிமுத்து இறந்ததற்கு நானும் ஒரு காரணமா? பிரபல நடிகர் உடைத்த உண்மை
பிரபல நடிகர் மாரிமுத்து உயிரிழந்ததற்கு, ஈஸ்வரியின் தந்தையாக நடித்த விஷ்னு வாசுதேவ் தான் காரணம் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
நடிகர் மாரிமுத்து
கடந்த 2008ஆம் ஆண்டில் கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தை இயக்கிய இவர், சுமார் 6 வருடங்கள் கழித்து விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா உள்ளிட்ட நட்சித்திரங்களை வைத்து புலிவால் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.
அதற்கு முன்பு, இயக்குநர்கள் மணிரத்னம், சீமான், எஸ்.ஜே. சூர்யா, வசந்த் ஆகியோரிடமும் பணியாற்றியுள்ளார். தற்போது இவரை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது எதிர்நீச்சல் சீரியல் தான்.
மீம்ஸ் கிரியேட்டர் முதல் ஆண் மற்றும் பெண் ரசிகர்கள் என ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தினை தனது நடிப்பினால் கவர்ந்தவர். இவரது முக பாவனை, தோரணை, ஏ... இந்தாம்மா... என்ற பேச்சு யாராலும் மறக்கமுடியாது. சமீபத்தில் இவரது திடீர் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மரணத்திற்கு சக நடிகர் காரணமா?
எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்துவின் மாமனார் அதாவது ஈஸ்வரியின் அப்பாவாக நடிக்கும் விஷ்ணு வாசுதேவ் நடிகர் மாரிமுத்து பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடிய அவருடன் மாமனாராக நடிக்கையில் சின்ன சின்ன தவறு இருந்தாலும் உடனே மனம் கோணாத படி கூறி அதனை மாற்றிவிடுவார்.
சீரியலில் சில வாரத்திற்கு முன்பு ஜீவானந்தம் ஈஸ்வரியை பெண் கேட்டதாக உண்மையை அவரிடம் கூறினேன். அத்தருணத்தில் மனம் உடைந்து போன அவரைக் கண்ட ரசிகர்கள் என்னை சரமாரியாக திட்டி வந்தனர். கம்பீரமாக இருந்த எங்க தலைவனை இப்படி சாய்ச்சிட்டாரே இந்த ஆளு என்று பேசியுள்ளனர்.
அந்த காட்சி முடிந்த சில தினங்களில் அவருக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டுள்ளது தனக்கு மிகவும் வருத்தமாக இருப்பதாகவும், பலர் இந்த ஆளு உண்மையை கூறாமல் இருந்தால் குணசேகரன் இவ்வாறு உடைந்துபோயிருக்க மாட்டார்... அதிக சத்தம் போட்டு கோபமாக பேசினார் மாரிமுத்து... மாரிமுத்து இறப்பதற்கு இவரும் ஒரு காரணம் என்று நெட்டிசன்கள் குற்றம் சாட்டுவதாக வருத்தப்பட்டுள்ளார்.
அன்றைய தினம் தனக்கு காலை 10.30 மணிக்கு இந்த தகவல் வந்த போது, இது உண்மையாக இருக்கக்கூடாது என்று தான் நினைத்தேன். பின்பு விசாரித்ததில் உண்மைதான் என்பது தெரிந்து மிகவும் வேதனைப்பட்டதுடன், தன்னால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவே இல்லை என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |