இனி தான் ஆட்டம் ஆரம்பம்.. திடீரென காணாமல் போன குணசேகரன்- பதற்றத்தில் ஜனனி
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் வழக்கம் போல மற்ற மருமகள்களை நடத்துவது போன்று விசாலாட்சி பார்கவியும் நடத்த பார்க்க, அதனை நந்தினி தட்டிக் கேட்கிறார். இந்த சண்டைக்கு நடுவில் குணசேகரனை காணவில்லை என வீட்டிலுள்ளவர்களுக்கு தெரியவருகிறது.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஜனனியும், சக்தியும் ஆதி குணசேகரனுக்கு எதிரான காணொளியை எடுப்பதற்காக வீட்டிலுள்ளவர்களிடம் கூறி விட்டு வெளியில் செல்கிறார்கள். ஆனால் இருவரும் நீண்ட நேரமாக காத்திருந்தும் அவர்களுக்கு கெவினின் நண்பன் அஸ்வினி வரவில்லை.
நேற்றைய தினம் சக்தி, “ஆதாரத்தை தராவிட்டால் உன்னுடைய உயிருக்கே ஆபத்தாகி விடும்..” என மிரட்டல் விட, பதறிப்போன அஸ்வின் நாளை தினம் காணொளியை தருவதாக கூறி செல்கிறார்.
அதன் பின்னர் வீட்டில் விசாலாட்சியின் ஆட்டம் ஆரம்பமாகியது. இதற்கு முடிவுக்கட்டும் விதமாக நந்தினி, “ எங்களை போன்று இவளையும் நடத்த வேண்டாம், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்..” எனக் கூறுகிறார்.
இந்த நிலையில், வீட்டில் சண்டை நடக்கிறது, ஜனனியும் சக்தியும் வெளியில் கிளம்புகிறார்கள். இதற்கிடையில் குணசேகரன் கடிதம் குறித்து யோசித்துக் கொண்டிருப்பது போன்று காட்சிகள் காட்டப்பட்டது.
இப்படியாக இன்றை நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |