குணசேகரனின் கடைசி காட்சி... ப்ரொமோவில் பேசியது என்ன?
எதிர்நீச்சல் சீரியலில் வில்லன் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து இன்று மாரடைப்பினால் காலமானார்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் சொத்தில் 40 சதவீதம் ஷேர் ஜீவானந்தம் பெயரில் இருக்கின்றது.
ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி வீட்டில் அனைவருக்கும் தெரியவந்துள்ளது. அப்பத்தாவை கொலை செய்வதற்கு குணசேகரன் திட்டம் போட்டிருந்தார்.
மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருந்த இந்த சீரியலின் நாயகனாக திகழ்ந்த குணசேகரன் சமீபத்தில் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தார்.
அவர் இறந்து சில தினங்கள் ஆகியுள்ள நிலையில், அவர் நடித்த காட்சிகள் எதிர்நீச்சல் சீரியலில் ஒளிபரப்பாகி வருகின்றது. நேற்றைய தினமும் அவருடைய குரலில் மாற்றம் செய்த நிலையில், இன்று வெளியான ப்ரொமோ காட்சி தான் கடைசி காட்சி என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில் தற்போது எதிர்நீச்சலில் மாரிமுத்துவின் கடைசி காட்சி சமூக வலைதளங்களில் ஷேர் ஆக ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |