எதிர்நீச்சல் சீரியலில் இருந்து மொத்தமாக விடைபெற்ற ஆதிகுணசேகரன்! உருக்கமான வீடியோ
எதிர்நீச்சல் சீரியலில் இருந்து மொத்தமாக விடைபெற்ற மாரிமுத்துவிற்காக இறுதி வீடியோவை வெளியிட்ட காணொளியைப் பார்த்து கண்கலங்கும் ரசிகர்கள்.
எதிர்நீச்சல் ஆதிகுணசேகரன்
பிரபல தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் தான் “எதிர்நீச்சல்” சீரியல் இந்த தற்போது ரசிகர்கள் மத்தியில் விறு விறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக மிரட்டலான நடிப்பை நடித்து வருபவர் தான் மாரிமுத்து மணிரத்னம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்து நடிகை கன்னிகாவிற்கு கணவனாகவும், 3 தம்பிகளுக்கு மூத்த அண்ணனாகவும் பெண்களை வேலைக்காரிகளைப்போல் நடத்தும் ஒரு கர்வமாக ஆணாகவும் நடித்திருக்கிறார்.
இவர் கடந்த வெள்ளிக்கிழமை டப்பிங் பேச சென்ற போது கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்ற வேளையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு அனைத்து திரைப்பிரபலங்களும் இவருக்கு அஞ்சலியும் இரங்கலும் தெரிவித்திருந்தனர்.
வீடியோ வெளியிட்ட தொலைக்காட்சி
இந்நிலையில், குறித்த சீரியலில் அவர் நடித்த காட்சிகளை எல்லாம் ஒன்று திரட்டி வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளது சன் தொலைக்காட்சி.
இந்த வீடியோவை அவருக்கும் கௌரவப்படுத்தும் முகமாகவும் புகழஞ்சலி செலுத்தும் விதமாகவும் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இத்தனை காலமும் தன் மொத்த வில்லத்தனத்தையும் வெவ்வேறு விதமாக காட்டிய எதிர்நீச்சல் ஆதிகுணசேகரன் இனி இல்லை என்று எண்ணி ரசிகர்கள் சோகம் அடைந்திருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |