Ethirneechal: குணசேகரனின் தந்தை யார்? புகைப்படத்தினால் அதிர்ச்சியில் குடும்பம்
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தந்தையின் புகைப்படத்தினை கரிகாலன் வாங்கி வந்துள்ள நிலையில், வீட்டில் அனைவரும் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.
குணசேகரன் ஜாமீனில் வீட்டிற்கு வந்துள்ள நிலையில், அவரிடமிருந்தே பணம் வாங்கி ஜனனி குற்றம் இல்லாதவர் என்பதை சக்தி நிரூபித்துள்ளார்.

மேலும் ஜனனி கலெக்டர் இருவரும் காவல்நிலையத்தில் தேவசகாயத்தினைக் குறித்து வழக்கு பதிவு செய்து போலிசாருடன் தங்களை கடத்தி வைத்த இடத்திற்கு சென்ற போது அங்கு அனைத்தையும் மாற்றி ஏமாற்றியுள்ளார்.
இந்நிலையில் வீட்டில் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பதற்கு புகைப்படம் வேண்டும் என்று பூசாரி கேட்டுள்ளார். இதற்காக கரிகாலன் தேடி அலைந்து குணசேகரனின் தந்தை புகைப்படத்தை கொண்டு வந்துள்ளார்.
ஆனால் புகைப்படத்தை பார்த்த அனைவரும் பேரதிர்ச்சியில் காணப்படுகின்றனர். மேலும் இதற்கு கதைகளத்தில் என்னென்ன பரபரப்பு ஏற்பட இருக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |