Ethirneechal: சொத்தை கொடுத்த குணசேகரன்! சரியான பதிலடி கொடுத்த ஈஸ்வரி
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் சொத்தில் தனக்கு எதுவும் வேண்டாம் என்று ஈஸ்வரி உறுதியாக தர்ஷனிடம் கூறியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது.
அதாவது எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகிவரும் நிலையில், குறித்த சீரியலில் சில மாற்றங்களை மட்டுமே செய்து வருகின்றனர்.
முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் வீட்டில் ஆண் ஆதிக்கம் தலையெடுத்து நிற்கின்றது. ஆனால் வீட்டு பெண்களும் தங்களால் முடிந்த அளவிற்கு போராடி வருகின்றனர்.
தற்போது வீட்டில் சொத்து பிரச்சனை சென்று கொண்டிருக்கின்றது. குணசேகரன் தம்பிகள் அனைவருக்கும் தனது சொத்தை பிரித்துக் கொடுத்துள்ளார்.
அதே போன்று தனது பங்கின் பத்திரத்தையும் தர்ஷனிடம் கொடுத்து ஈஸ்வரியிடம் கொடுக்க கூறியுள்ளார். ஆனால் ஈஸ்வரி தனக்கு சொத்தில் எதுவும் தேவையில்லை என்று தர்ஷனை அனுப்பி வைக்கின்றார்.
இதற்கு பின்பு பெண்கள் அனைவரும் எடுக்கப்போகும் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |