Ethirneechal: ரத்த வெள்ளத்தில் கிடந்த ஈஸ்வரி! அலறி துடித்த நந்தினி, தர்ஷன்
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியை குணசேகரன் சரமாரியாக தாக்கியதால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியதைப் பார்த்த நந்தினி துடிதுடித்துள்ளார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் மீண்டும் தவறுக்கு மேல் தவறு செய்து வருகின்றார்.
பார்கவியை தர்ஷனுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு குணசேகரனிடம் ஈஸ்வரி பேசிய நிலையில், பேச்சு கைகலப்பாக மாறியுள்ளது.
கோபத்தின் உச்சத்திற்கு சென்ற குணசேகரன் ஈஸ்வரியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் ஈஸ்வரி மயங்கி கீழே கிடக்கின்றார்.
இரவு இந்த சம்பவம் அரங்கேறிய நிலையில், காலையில் இதனை அறியாத நந்தினி, காபி எடுத்து வந்த பார்த்த போது ஈஸ்வரியின் நிலையைக் கண்டு கதறியுள்ளார்.
யாரும் உதவிக்கு வராத நிலையில், தர்ஷன், தர்ஷினி, நந்தினி மட்டும் கதறியபடி தூக்கிக் கொண்டு சென்றுள்ளனர்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |