பட்டுசேலையில் தடபுடலாக ரெடியான ஈஸ்வரி- வாயடைக்க வைத்த அழகு
எதிர்நீச்சல் நடிகை கன்னிகா பட்டுசேலையில் தடபுடலாக ரெடியான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கன்னிகா
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நடிகை கனிகா பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த வந்தார்.
அதன் பின்னர் பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தினால் தற்போது சீரியல் நடிக்க ஆரம்பித்து விட்டார். அத்துடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பை காட்டி, அவருக்கு என தனியாக ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறார். அதிலும் சிறப்பாக நடித்து வருகிறார். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்காக போராடிய ஈஸ்வரி தற்போது பிள்ளைகளின் வாழ்க்கைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்.
ஒருவழியாக தர்ஷினிக்கு நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தி, அவரை குணசேகரன் பிடியில் இருந்து காப்பாற்றி விட்டார். இந்த விவாகரத்தில் குணசேகரன் ஜெயிலுக்கும் போனார்.
வெளியில் வந்த குணசேகரன் தற்போது தர்ஷனனுக்கு அன்புக்கரசியை எப்படியாவது திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார். ஆனால் தர்ஷனனுக்கு பார்கவியை தான் பிடித்திருக்கிறது.
பட்டுசேலையில் ஜொலிக்கும் அழகு
இந்த நிலையில், சீரியல் மேற்குறிப்பிட்டது போன்று பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ஈஸ்வரியாக நடித்து வரும் கன்னிகா சீரியலை போன்று சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அவ்வப்போது கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சியான புகைப்படங்கள் ஆகியவற்றை பகிர்வார்.
அந்த வகையில், பட்டுசேலையில் தடபுடலாக ரெடியான காணொளியை தற்போது பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள், “மகனுக்கு திருமணம், தற்போது இதெல்லாம் தேவையா?” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
