குணசேகரனுக்கு செக் வைத்த ஜனனி.. சூடுபிடிக்கும் அறிவுக்கரசி ஆட்டம்- கைகூடிய திருமணம்
இவ்வளவு நாளாக ஆடிய ஆட்டத்தை அறிவுக்கரசி வாயால் வெளியில் வரும்படி ஜனனியின் ஆட்டம் சூடுபிடித்துள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தற்போது சீரியல் குணசேகரன் செய்த காரியத்தினால் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தை பயன்படுத்தி தர்ஷன்- அன்புக்கரிசி திருமணத்தை நடத்தி விடலாம் என திட்டம் போடுகிறார்.
இதனை தொடர்ந்து தற்போது சீரியலில் தர்ஷன் திருமணத்தை மையமாக வைத்து குணசேகரனுக்கும் வீட்டு மருமகள்களும் பலத்த சண்டை போடும் காட்சிகள் சென்றுக் கொண்டிருக்கின்றன. ஈஸ்வரி, ஜனனி இருவரும் இந்த பிரச்சினையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பதிலாக நந்தினி, ரேனுகா இருவரும் களத்தில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்.
கண்ணீருடன் நிற்கும் அறிவுக்கரசி
இந்த நிலையில், வீட்டில் நடக்கும் பிரச்சினைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அறிவுக்கரசி, எப்படியாவது தன்னுடைய தங்கையான அன்புக்கரசிக்கு தர்ஷனனை திருமணம் செய்து வைத்து விடலாம் என பல சதி வேலைகளை செய்து வருகிறார்.
இப்படி சீரியலில் தர்ஷன் திருமணத்திற்காக குடும்பத்தினர் அடித்துக் கொள்ளும் வேளையில் அறிவுக்கரசி செய்த கொலை பற்றிய தகவல்கள் வெளியில் வர ஆரம்பித்துள்ளது.
சடங்குகளை செய்யுமாறு கூறிய குணசேகரன் காவல் அதிகாரிகளை பார்த்தவுடன் கட்சி மாறி பேச ஆரம்பித்துள்ளார். அறிவுக்கரசியை பார்த்து, “ இவங்க யார்ன்னே தெரியாது..” என்கிறார். இவர்களின் பதிலால் கடுப்பான அறிவுக்கரசி கதிர், குணசேகரன் தர்ஷன் திருமணத்திற்காக இவ்வளவு நாட்களாக என்னென்ன செய்தார்களோ அவற்றை அனைவரும் பார்க்க கூறுகிறார்.
இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கும் ஜனனி, பார்கவி- தர்ஷன் திருமணம் சரியாக நடந்தால் காவல் அதிகாரிகள் உள்ளே வரமாட்டார்கள் என செக் வைத்து பேசுகிறார். ஜனனியின் மிரட்டலுக்கு பயந்து குணசேகரன் தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்வாரா? என்பதை பதிவில் பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான எபிசோட் காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |