Bigg Boss 9: கையோங்கிய எஃப்.ஜே.. கலவரத்தில் பிக்பாஸ் வீடு- வெளியேற்றப்படுவாரா?
பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் திவாகரன் மற்ற போட்டியாளர்களுடன் போட்ட சண்டை முற்றியதால் எஃப்.ஜே அவரை அடிப்பதற்காக கையோங்கியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பபட்டு வருகிறது.
நேற்றுமுன் தினம் மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் வருகிறார்.
இதனை தொடர்ந்து அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
கையோங்கிய முக்கிய பிரபலம்
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 9 ஆரம்பமான நாள் முதல் திவாகரன் செய்யும் அலப்பறைகளை வீட்டிலுள்ள மற்ற போட்டியாளர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இவர் வெளியில் தன்னை தானே விளம்படுத்திக் கொண்டது போன்று உள்ளே சென்றும் தற்பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.
இதனால் கடுப்பான மற்ற பிரபலங்கள், “உங்க வேலையை மட்டும் பாருங்க..” எனக் கண்டித்துள்ளனர். ஆனாலும் அடங்காத திவாகரன் காலையில் எழுந்து வந்தவுடன் ரம்யா ஜோவிடம் செய்த பிரச்சினை படிபடியாக முற்றிய நிலையில் எஃப்.ஜே அடிக்கச் சென்றுள்ளார்.
அதே பார்த்துக் கொண்டிருந்த பிரபலங்கள் தடுத்தாலும் திவாகரனின் மோசமான வார்த்தை பிரயோகம் சண்டையை இன்னும் சூடுபிடிக்கச் செய்துள்ளது. இதனால் மகாநதி சீரியல் நடிகர் கம்ருதினும் அடிப்பதற்காக கையோங்குகிறார்.
இப்படி சண்டை முற்றி போனால் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்படுமா? என்பதை காண சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |