Ethirneechal: பார்கவி காலில் விழுந்து கதறியழுத தர்ஷன்! குணசேகரன் என்ன செய்ய போகிறார்?
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவியை பார்த்து தர்ஷன் தான் செய்த தவறுக்காக கதறி அழுது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் தர்ஷனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்த நிலையில், திருமணத்திற்கு விருப்பம் இல்லாமல் தர்ஷன் வீட்டைவிட்டு எஸ்கேப் ஆகினார்.
பின்பு பார்கவி, பார்கவி தந்தை, தர்ஷன் என மூவரும் ஜீவானந்தத்திடம் சேர்ந்த நிலையில், இதனை அறிந்த குணசேகரன் நாடகம் போட்டு அனைவரையும் வரவழைத்துள்ளார்.
பார்கவியின் தந்தையை அடித்து கொலை செய்துள்ள நிலையில், வீட்டு பெண்கள் வெளியேறி குணசேகரன் மற்றும் தம்பிகள் மீது புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் தர்ஷன் வீட்டிலிருந்து பார்கவி தந்தையின் இறுதி சடங்கு நடக்கும் இடத்திற்கு வந்து தனது தவறை நினைத்து வருந்தி அழுதுள்ளார்.
ஒரு கட்டத்தில் பார்கவியின் காலில் விழுந்து கதறியழுது மன்னிப்பு கேட்கவும் செய்துள்ளார். இதன் பின்பு குணசேகரனின் ஆட்டம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |