வியாக்கியானம் பேசிய பார்வதி.. சமார்த்தியமாக காய் நகர்த்தும் கனி- இதுவும் நடிப்பா?
பிக்பாஸ் வீட்டில் வேலை செய்யாமல் வியாக்கியானம் பேசிக் கொண்டிருந்த பார்வதியிடம் மெதுவாக பேசி கனி வேலை வாங்கியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் ஆரம்பமாகி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி வழக்கமான சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் சூடுபிடிப்பது குறைவாக உள்ளது.சின்னத்திரை பிரபலங்களை விட இந்த சீசனில் சோசியல் மீடியா பிரபலங்கள் தான் அதிகமாக கலந்து கொண்டுள்ளனர்.
20 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் வார இறுதியில் நந்தினி மனநல ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது என காரணம் காட்டி வெளியேறினார்.
அதன் பின்னர் எவிக்ஷனில் குறைவான வாக்குகளை பெற்று பிரவீன் காந்தி, அப்சரா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
சமார்த்தியமாக விளையாடும் கனி
இந்த நிலையில், இன்றைய தினம் காலையில் வீட்டை சுத்தம் செய்யும் பணியின் பொழுது பார்வதி குப்பையெல்லாம் எடுக்க முடியாது என பிரச்சினை செய்து கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் உள்ளே வந்த கனி, “பழைய கதையெல்லாம் விட்டுட்டு அவங்க குப்பையை எடுக்கமாட்டார்கள். நீங்கள் தான் எடுக்க வேண்டும். எடுக்குறீங்களா?” என கேட்க, பார்வதியும் மனம் மாறி அதை நானே செய்கிறேன் என்பது போன்று கைக்கு கையுறை போட்டுக் கொண்டிருக்கிறார்.
பாவமாக பிக்பாஸ் வீட்டிற்குள்ளே வந்த கனி, சமார்த்தியமாக விளையாடுவதை பார்த்து சின்னத்திரை ரசிகர்கள் வியந்து போயுள்ளனர். அதிலும் சில இடங்கள், “ நான் இப்படி இல்லை. இங்கு வந்த பின்னர் இப்படி ஆகிட்டேன்.” என்றும் கூறியிருக்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |