Bigg Boss 9: குறும்படம் போட்ட பிக்பாஸ்.. தொங்கிய தலைவர் முகம்- சரமாறியாக தாக்கும் போட்டியாளர்கள்
பிக்பாஸ் வீட்டில் இன்றைய தினம் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் திவாகரனை பார்வதி எட்டி உதைக்கும் காட்சியை இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பபட்டு வருகிறது.
கடந்த வாரம் மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் வருகிறார்.
இதனை தொடர்ந்து அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
குறும்படம் போட்ட பிக்பாஸ்
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 9 ஆரம்பமான நாள் முதல் போட்டியாளர்கள் உள்ளே பிரச்சினைகள் ஓயவில்லை.
தினம் தினமும் ஏதாவது பிரச்சினை வந்துக் கொண்டே இருக்கின்றன. சண்டை போடுவதில் இந்த வாரத் தலைவர் டாஸ்க்கை மறந்து விட்டார்.
டாஸ்க்கை பார்க்காமல் தூங்கியதால் 50 லிட்டர் தண்ணீர் குறைவாக இருக்கிறது. இதனால் சக போட்டியாளர்கள் தலைவரை திட்ட ஆரம்பித்து விட்டனர்.
இப்படி சண்டை முற்றி போனால் பிக்பாஸ் போட்டியாளர்கள் எப்படி இந்த வாரம் முழுவதும் சமாளிப்பார்கள் என்பதை காண சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |