Ethirneechal: மோசமாகும் தர்ஷன் நிலை.. ஆதாரத்தை திருடிய நந்தினி- பிளான் யாருடைய தெரியுமா?
நாளுக்கு நாள் தர்ஷனனின் நிலை மோசமாகி வருவதால், இதற்கெல்லாம் முடிவுகட்டுவதற்காக வீட்டிலுள்ள மருமகளில் ஒருவர் சூப்பரான ஒரு பிளான் போட்டுக் கொடுத்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
அவர் இந்த நிலைக்கு செல்வதற்கு அவருடைய கணவர் குணசேகரன் தான் காரணம் என வீட்டிலுள்ள பெண்கள் கூறுகிறார்கள். இதற்கான ஆதாரம் வீட்டில் வந்து அதிகாரமாக உரிமை கொண்டாடும் அறிவுக்கரசியிடம் இருக்கிறது.
ஆனால் ஈஸ்வரி கொலை முயற்சி வழக்கில் ஜனனியை சிக்க வைப்பதற்காக வீட்டில் சதி நடந்து கொண்டிருக்கிறது.
பணப்பலத்தை காட்டும் குணசேகரன் மற்றும் அறிவுக்கரசி இருவரும் புதிதாக அதிகாரியொருவரை கொண்டு வருகிறார்கள். அவர், உண்மையை கண்டுபிடிக்காமல் ஜனனியை எப்படி சிக்க வைக்கலாம் என ஆதாரம் சேகரிக்கிறார்.
அறிவுக்கரசி மடக்கிய ஜனனி
இந்த நிலையில் மருத்துவமனையில் கண்விழித்த ஈஸ்வரி ஜீவானந்தத்திற்கு கோல் செய்து,“தன்னுடைய இந்த நிலைக்கு குணசேகரன் தான் காரணம்..” என்ற உண்மையை கூறி விடுகிறார்.
இந்த விடயத்தை நடக்கும் பொழுது பார்கவியும் பக்கத்தில் நிற்கிறார். ஈஸ்வரி வழக்கில் ஆதாரங்களை சேகரிக்குமாறு ஜீவானந்தம் கோல் செய்து ஜனனியிடம் கூற, பார்கவியும் ஜனனியிடம் முக்கியமான உண்மையை கூறுகிறார். அத்துடன் நிறுத்தாமல் குணசேகரன், அறிவுக்கரசி இருவரும் சேர்ந்து தர்ஷனனுக்கு போதைப் பொருள் கலந்து கொடுத்துள்ளனர்.
இதனால் கடந்த தினங்களில் அவர் மயக்கமான நிலையில் இருக்கிறார். அவருக்கு துணையாக அன்புக்கரிசி இருந்து பார்த்துக் கொள்கிறார். இது தெரியாமல் வீட்டிலுள்ளவர்களுடன் இணைந்து பூஜை செய்கிறார்கள்.
பூஜை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் ஜனனி, அறிவுக்கரசி அறையில் உள்ள தொலைபேசியை எப்படி எடுக்கலாம் என்பதை நந்தினிக்கு கூறுகிறார். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அறிவுக்கரசியை பிடிக்கலாமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |