இனி செய்யாதீங்க.. பெண்களின் வாழ்க்கை கெட்டு விடும்- எச்சரிக்கும் சாணக்கியர்
பண்டைய காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அறிஞர்களில் ஒருவராக இருந்தவர் தான் சாணக்கியர்.
இவரின் கொள்ளைகள் மனித வாழ்க்கையை மாற்றும் வகையில் இருக்கும்.
இந்த கொள்கைகளை தொகுத்து “சாணக்கிய நீதி” என்ற நூல் எழுதப்பட்டுள்ளது. அந்த நூலில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான பல ரகசியங்களை மறைமுகமாக கூறப்பட்டுள்ளது.
மேலும், மனிதனாக பிறந்த ஒருவர் தனது வாழ்க்கையை மேம்படுத்த தேவையான மதம், தர்மம், கர்மம், பாவம் மற்றும் புண்ணியங்கள் என்பவற்றை அவர் மொழி நடையில் கூறியுள்ளார்.
அந்த வகையில், பெண்களை மறந்தும் செய்யக் கூடாத விடயங்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
சாணக்கிய தத்துவங்கள்
1. பெண்கள் சில பிரச்சினைகள் வரும் பொழுது அமைதியாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத போது அவர்களது பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பிரச்சினைகள் வரலாம் என சாணக்கியர் கூறுகிறார்.
2. கணவன் கோபமாக இருக்கும் சமயத்தில் மனைவி அமைதியாக இருக்க வேண்டும். மனைவி முரணாக பேசும் பொழுது இருவருக்கும் சண்டை வர வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கை பாதிக்கப்படலாம்.
3. குடும்பத்தில் பெரியவர்கள் பிரச்சினைகள் குறித்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது பெண்கள் நடுவில் சென்று பேசக்கூடாது. அது அவர்களின் கண்ணியத்தை பாதிக்கும்.
4. சாணக்கிய நீதியின்படி, யாராவது வீட்டில் வலியுடன் இருக்கும் பொழுது பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பேசும் பொழுது அது வீட்டில் பெரிய பிரச்சினையாக மாறலாம்.
5. சிலர் ஜாடையாக பேசுவதை பழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் அந்த விடயம் அவர்களுக்கு அவமரியாதையை உண்டு பண்ணும் என சாணக்கியர் கூறுகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |