அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம்
அன்புக்கரசியின் திருமண சடங்குகளை செய்யக் கூட சொந்தம் இல்லாமல் அறிவுக்கரசியை தவித்துக் கொண்டிருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தற்போது சீரியல் குணசேகரன் செய்த காரியத்தினால் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தை பயன்படுத்தி தர்ஷன்- அன்புக்கரிசி திருமணத்தை நடத்தி விடலாம் என திட்டம் போடுகிறார்.
இதனை தொடர்ந்து தற்போது சீரியலில் தர்ஷன் திருமணத்தை மையமாக வைத்து குணசேகரனுக்கும் வீட்டு மருமகள்களும் பலத்த சண்டை போடும் காட்சிகள் சென்றுக் கொண்டிருக்கின்றன.
கண்ணீருடன் நிற்கும் அறிவுக்கரசி
சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திய அறிவுக்கரசி, எப்படியாவது தன்னுடைய தங்கையான அன்புக்கரசிக்கு தர்ஷனனை திருமணம் செய்து வைத்து விடலாம் என பல சதி வேலைகளை செய்து வருகிறார்.
இப்படி சீரியலில் தர்ஷன் திருமணத்திற்காக குடும்பத்தினர் அடித்துக் கொள்ளும் வேளையில் அன்புக்கரசி திருமண சடங்குகளை செய்வதற்கு அறிவுக்கரசி குடும்பத்தில் யாரும் இல்லை. இதனால் அன்புக்கரசி தன்னை வளர்த்து ஆளாக்கிய அக்காவையே சடங்குகளை செய்ய அழைக்கிறார்.
ஆனாலும் ஐயர், “ திருமணமாகாதவர் சடங்குகள் செய்வதற்கு சாஸ்த்திரத்தில் இடம் இல்லை..” என உறுதியாக கூறி விடுகிறார். என்ன தான் சடங்கு சம்பிரதாயங்களில் இடம் இல்லாவிட்டாலும் தன்னுடைய அக்காவிற்கு ஒரு இடம் கொடுக்க வேண்டும் என அன்புக்கரசி அடம்பிடிக்கிறார்.
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குணசேகரன் அன்புக்கரசியின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறார். நடப்பதை பார்த்த அறிவுக்கரிசிக்கு கண்ணில் நீர் நிறைந்துள்ளது.
இப்படியாக இன்றைய நாளுக்கான எபிசோட் காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |