Ethirneechal: பிச்சைக்காரன் என்று அசிங்கப்படுத்தப்பட்ட சக்தி... அறிவுக்கரசியின் அடுத்த திட்டம்
எதிர்நீச்சல் சீரியலில் சக்தியை பிச்சைக்காரன் என்று நபர் ஒருவர் பேசியுள்ளதால் கோபத்தின் உச்சத்தில் காணப்படுகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.
ஆனால் பெண்கள் அனைத்து சவால்களையும் எதிர்த்து போராடி வருகின்றனர். சிறையில் இருந்த குணசேகரன் தற்போது வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் சக்தியும் வீட்டில் உள்ள சக ஆண்களைப் போன்று அனைவரிடமும் கோபத்தை வெளிக்காட்டியுள்ளார்.
ஜனனி, ஈஸ்வரி யாரையும் விட்டு வைக்காமல் அவர் பேசியுள்ளார். மற்றொரு புறம் அறிவுக்கரசியின் அடுத்த நடவடிக்கை எதுவும் புரியாத புதிராகவே இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
