திடீரென நிறுத்தப்பட்ட சீரியல்... சட்டென புதிய பிசினஸ் தொடங்கிய எதிர்நீச்சல் நடிகை
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த பிரபல நடிகை புதிய பிஸ்னஸ் ஒன்றினை தொடங்கியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் கடந்த கடந்த 2022ம் ஆண்டு ஆரம்பித்த நிலையில் கடந்த 8ம் தேதியுடன் நிறைவடைந்தது.
திருச்செல்வம் இயக்கிய இந்த சீரியலில் நடிகைகள் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர்.
மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த சீரியல் சட்டென்று சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. தற்போது இந்த சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த ஹரிப்பிரியா புதிய பிஸ்னஸ் ஒன்றினை தொடங்கியுள்ளார்.
பரதநாட்டிய டான்ஸரான நந்தினி, புதிதாக நடனப்பள்ளி ஒன்றை தொடங்கி உள்ளார். ‘காளிகல்பா’ என பெயரிடப்பட்டுள்ள அந்த பள்ளியில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் நடன வகுப்புகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
இதன்மூலம் தன்னுடைய நீண்ட நாள் கனவு நனவாகி உள்ளதாக கூறி இருக்கிறார். புதிதாக நடனப்பள்ளி தொடங்கியுள்ள ஹரிப்பிரியாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |