மகளுக்கு தாயாக மாறிய ஈஸ்வரி... காதலியின் கண்ணீரால் வாய்பேச முடியாமல் ஜீவானந்தம்
எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தத்தின் மனைவியை குணகேரனின் ஆட்கள் கொலை செய்த நிலையில், இதனை அறிந்த வீட்டில் உள்ள பெண்கள் கதறியழுது கவலையுடன் காணப்படுகின்றனர்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் சொத்தில் 40 சதவீதம் ஷேர் ஜீவானந்தம் பெயரில் இருந்துள்ளது.
ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை பார்வையாளர்களுக்கு தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து சொத்தை மீட்க நினைத்த குணசேகரன் ஆட்களை அனுப்பி அவரை கொலை செய்ய நினைத்த நிலையில், அவருக்கு பதிலாக மனைவியை கொலை செய்துள்ளனர்.
இதனை வீட்டில் இருக்கும் பெண்கள் கண்டுபிடித்த நிலையில், ஜீவானந்தத்தின் மகளை காண்பதற்கு வந்துள்ளனர். அப்பொழுது வெண்பாவை பார்த்து நந்தினி கதறியழுத காட்சி அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
ஜீவானந்தத்தின் மகளுக்கு ஈஸ்வரி தாயாக நிற்கும் காட்சியை அவதானித்த ஜீவானந்தம் வாய்பேசமுடியாமல் அதிர்ச்சியில் நிற்கின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |