குணசேகரனுக்கு எதிராக கிளம்பிய தம்பிகள்- வாயடைச்சி போன விசாலாட்சி! குடும்பம் ஒன்று சேருமா?
தர்ஷினி விடயத்தில் குணசேகரனுக்கு எதிராக அவரது தம்பிகளே எதிர்ப்பு காட்டி வருகிறார்கள்.
எதிர்நீச்சல்
எந்த ராசியினர் சிவப்பு கயிறு கட்டுவது அதிர்ஷ்டம் கொடுக்கும் ? யார் கட்டவே கூடாதுன்னு தெரிஞ்சிக்கோங்க
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் சென்றுக் கொண்டிருக்கும் தொடர் எதிர்நீச்சல்.
பெண்களை அடிமைப்படுத்தி வீட்டு வேலைகளுக்காக மட்டும் பயன்படுத்தும் கணவர்களுக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் வருகின்றது என்பதனை மையமாகக் கொண்டு இந்த சீரியல் எடுக்கப்பட்டுகிறது.
இந்த சீரியலில் கதாநாயகியான ஜனனி ஒரு வழியாக தன்னுடைய கணவரை மாத்திரம் மாற்றி தன்னோடு வைத்து கொள்கிறார்.
தன்னை போல் குடும்பத்திலுள்ள மற்ற சகோதரிகளுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் 18 வயது கூட முடியாத தர்ஷினிக்கு எப்படியாவது கரிகாலனை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முடிவில் குணசேகரன் உறுதியாக இருந்தார்.
இந்த விடயம் தவறு என யார் பேசினாலும் ஏற்றுக் கொள்ளாத குணசேகரனின் பகையாளியொருவர் தர்ஷினியை வழிமறித்து கடத்தி சென்றுள்ளார்.
வாயடைச்சி போன விசாலாட்சி
இந்த நிலையில் வீட்டிலுள்ளவர்கள் தர்ஷினிக்கு என்ன நடந்தது என தெரியாமல் போலிஸ், வீடு என அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
இவற்றை பார்த்து தவறு என புரிந்து கொண்ட கதிர் முதல் தடவையாக குணசேகரனுக்கு எதிராக திரும்பியுள்ளார்.
இது புரிந்தாலும் ஆயிரம் தவறு செய்தாலும் என்னுடைய மகன் தான் சரி என விசாலாட்சியும் பிடிவாதமாக இருக்கிறார். ஜனனி குடும்பத்திலுள்ளவர்கள் குணசேகரன் வீட்டில் என்ன நடக்கிறது என தெரியாமல் தலையை உள்ளே விடுகிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இந்த சீரியலுக்கு பாரிய ஆதரவு ரசிகர்களிடம் இருந்து கிடைத்து வரும் நிலையில், ஜனனி எப்படி நாச்சியப்பன் குடும்பத்தினருக்கு பதிலடி கொடுப்பார்.
என்னென்ன விடயங்களில் இனி கவனமாக இருந்து காயை நகர்த்த போகிறார்? என்பதனை இனி வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |