செழியனை அசிங்கப்படுத்திய மாமனார்: கொதித்தெழும் ஈஸ்வரி பாட்டி- இனி நடக்க போவது என்ன?
வீடு தேடி வந்து செழியனை அவரது மாமனார் அசிங்கப்படுத்தியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் கணவனை இழந்த மனைவி பிள்ளைகளுக்காக என்னென்ன விடயங்களை செய்து வருகிறார் என்பதனை மையமாக கொண்டு கதைக்களம் நகர்த்தப்படுகின்றது.
அந்த வகையில், செழியன்- ஜெனி இருவரும் விவாகரத்து செய்வதற்காக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கு செழியன் வீட்டிலிருந்து எதிர்ப்பு தெரிவித்தாலும், ஜெனி பக்கம் ஆதரவு தெரிவித்து அவரது அப்பா வேலைகளை செய்து வருகிறார்.
அசிங்கப்படுத்திய மாமனார்
இந்த நிலையில் செழியனின் குழந்தைக்கு பெயர் வைக்கும் வைபவத்திற்கு அழைப்பிதழ் தருவதற்காக ஜெனியின் அப்பா செழியன் வீட்டிற்கு வருகிறார்.
அப்போது செழியன் “ஏ இப்படியெல்லாம் பேசுறீங்க..” என கேட்ட போது அதற்கு “நீயெல்லாம் பேசவே கூடாது...” என செழியனை அசிங்கப்படுத்தியுள்ளார்.
இதனை பார்த்து கொண்டிருந்த பாட்டி “ ஏன் அவே பேசக் கூடாது இது நியாயமா?” என கேட்ட போது கடுப்பாகிய ஜெனியின் அப்பா, “ நீங்க எல்லாம் நியாயத்தை பற்றி பேசவே கூடாது...” என அவர் வாயையும் அடைத்துள்ளார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல் இப்படி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில் ரசிகர்களின் ஆதரவு செழியன் பக்கம் அதிகரித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |