Ethirneechal:வீடியோ ஆதாரத்தால் வசமாக சிக்கிய குணசேகரன் - பீதியில் அறிவுக்கரசி
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியை கொல்ல முயன்ற வீடியோ ஆதாரம் வேறொருவர் கையில் சிக்கியுள்ளது. இதனால் அறிவுக்கரசி பீதியடைந்துள்ளார்.
எதிர்நீச்சல்
எதிாநீச்சல் சீரியல் தற்போது தர்ஷன் திருமணத்தை முன்னோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.
ஈஷ்வரி குணசேகரனால் தாக்கபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து ஈஸ்வரியின் இந்த நிலைக்கு ஜீவானந்தம் தான் காரணம் என புதிய சர்ச்சையை குணசேகரன் கிளப்பிவிட்டு திருமண வேலையில் குஷியாக இருக்கிறார்.
இந்த நிலையில் குணசேகரன் ஈஸ்வரியை கொல்ல மயன்ற வீடியோ ஆதாரம் இன்னுமொரு நபரின் கையில் மாட்டியுள்ளது.
வசமாக சிக்கிய குணசேகரன்
ஈஸ்வரியை அடித்து அவரை கொல்ல முயன்ற வீடியோ ஆதாரம் மொபைல் போனில் இருந்தது.
அதை அறிவுக்கரசி திருட்டுதனமாக கைப்பற்றி கொண்டதால் யாருக்கும் அந்த உண்மை தெரியாமல் இருந்தது.
இதனிடையில் மொபைல் போனை திருத்த வந்த ஒரு நபர் தற்போது அறிவுக்கரசியிடம் ஈஸ்வரியை கொல்ல முயன்ற வீடியோ ஆதாரத்தை எடுத்து விட்டதாக கூறுகிறார்.
திருமணம் நடக்கவிருக்கும் சமயத்தில் இதை கேள்விப்பட்ட அறிவுக்கரசி பீதியில் திகைத்து நிற்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
