நீதிக்காக இறுதிவரை போராடும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?
ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, விசேட திறமைகள் மற்றும் அவர்களிகளின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்வில் எல்லா விடயங்களையும் விடவும் நீதி மற்றும் நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாகவும், நீதி கிடைக்கும் வரையில் போராடும் இயல்புடையவர்களாகவும் இருப்பார்கள்.
அப்படி தங்களுக்கு தங்களின் உரிமைகளுக்காவும், நீதிக்காகவும் இறுதிவரையில் போராடும் கம்பீரமான ஆளுமை கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நியாயம் மற்றும் சமநிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் தங்களின் நடத்தையிலும் அதை பிரதிபலிப்பார்கள்.
இவர்களிடம் வரும் வாதத்தின் இரு பக்கங்களையும் பார்த்து, நடுநிலையையான முடிவெடுப்பதில் இவர்கள் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் இவர்கள் நடுவர்ளாகவும், நீதி துறையிலும் தொழில் புரிய கூடியவர்களாக இருப்பார்கள்.
வலுவான நெறிமுறைகளை அனைத்து சூழ்நிலைகளிலும் கடைப்பிடிப்பார்கள்.நீதிக்காக இறுதிவரையில் போராடும் குணம் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்கள் சாகச உணர்வுகளுக்கும், சுதந்திர மோகத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் தங்கள் மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் பறிக்க நினைத்தால் யாராக இருந்தாலும் விடவே மாட்டார்கள்.
அவர்கள் கூர்மையான அறிவு மற்றும் வலுவான நீதி உணர்வு இவர்ளை நீதி கிடைக்கும் வரையில், போராட தூண்டுகிறது.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் நீதியின் கடவுளாக அறியப்படும் சனிபகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இவர்களிடம் நிதீக்காக பேராடும் குணம் இயற்கையாகவே இருக்கும்.
இவர்கள் சுதந்திரம் மற்றும் சமத்துவம் மீது தீவிர மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.குடும்பத்திலும் சரி, சமூகத்திலும் சரி அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் முதல் நபராக இந்த ராசியினர் இருப்பார்கள்.
இவர்களிடம் ஆழ்ந்த சமூகப் பொறுப்புணர்வு மற்றும் உலகை சிறந்த இடமாக மாற்றுவதற்கான உண்மையான விருப்பம் இருக்கும். அநீதி மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் இரக்கம் நிறைந்த மனிதர்களாக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
