எதிர்நீச்சல் 2 ஜனனி யார் தெரியுமா? இவங்களுக்கு இப்படி ஒரு திறமை இருக்கு
எதிர்நீச்சலில் நடிக்கும் வி.ஜே பார்வதி பற்றி தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது.
எதிர்நீச்சல்
பிரபல டிவியில் இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் வெளியான எதிர்நீச்சல் சீரியல் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.
அந்த சீரியலின் முடிவுக்கு பிறகு அதைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் உளிபரப்பாகி தற்போது மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
இதில் கதாநாயகியாக வி.ஜே பார்வதி தான் நடிக்கிறார். பார்வதி சன் டிவியில் ஆரம்பத்தில் விஜேவாக இருந்தார். அதற்கு பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான புது புது அர்த்தங்கள் சீரியலில் நடிகை தேவயானிக்கு மருமகளாக கதாநாயகியாக அறிமுகமானார்.

பார்வதி "புது புது அர்த்தங்கள்" சீரியல் மூலம் நல்ல வரவேற்பு பெற்று இருந்தார். ஆனால் இந்த சீரியல் முடிவடைந்த பிறகு ஒரு சில சீரியல்களில் கெஸ்ட் ஆக மட்டும் கலந்து கொண்டு இருக்கிறார்.
அவர் தான் இப்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். வி.ஜே பார்வதி எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னிச்சையாக டிவி நிகழ்ச்சியில் வி.ஜே வாக களமிறங்கி தற்போது நடிகையாகவும் மாறியுள்ளார்.

இவர் வி. ஜே என பல மக்களுக்கு தெரிய வந்ததன் காரணம் நடிகா அர்ஜன் தாஸ் இவருக்கு ப்ரபோஸ் செய்தது தான்.
மேடையில் பார்வதிக்கு அர்ஸஜீன் தாஸ் செய்த ப்ரபோஸ் காணொளி இணையத்தில் வைரலாகியதன் மூலம் தான் இவர் வி.ஜே என்பதே தெரிய வந்தது பலருக்கு.
தற்போது எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் பார்வதிக்கு இணையவாசிகள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |