குணசேகரனுடன் புது கூட்டணி சேரும் நாச்சியப்பன் குடும்பத்தினர்.. ஆத்தா போட்ட நிபந்தனை- தாலிக்காக போராடும் தருணம்
குணசேகரனுடன் புது கூட்டணியாக நாச்சியப்பன் குடும்பத்தினர் சேர்ந்துள்ளனர்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான்.
இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஏனென்றால் சீரியல் துவங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டு இருக்கிறது.
காரசாரமான விவாதங்கள், புது புது டுவிஸ்ட்கள் என எதிர்நீச்சல் இயக்குநர் கதைக்களத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
தற்போது மனைவிக்கு எதிராக குணசேகரன் தேர்தலில் நின்று வெற்றிப் பெறுவதற்கான வேலைகளை பார்த்து கொண்டிருக்கிறார்.
தாலிக்கான போராட்டம்
இந்த நிலையில் ஜனனியின் அப்பாவின் குடும்பம் குணசேகரன் வீட்டிற்கு வந்துள்ளனர். இதனால் கடுப்பான ஜனனி அவர்களை வெளியே போகுமாறு கத்துகிறார்.
ஜனனி இப்படி கூறியதும் குணசேகரன், “ இது என்னுடைய வீடு..” என ஒரு பக்கம் சத்தம் போடுகிறார்.
நாச்சியப்பனின் அக்கா ஜனனியின் அம்மாவின் தாலியை கோயிலில் வைத்து சத்தியம் செய்து திருப்பி கேட்கிறார்கள்.
இவர்கள் இப்படி பேசியதை கேட்ட ஜனனியின் அம்மா அதிர்ச்சியடைகிறார். அவர் மட்டுமல்ல வீட்டிலுள்ள அனைவருக்கும் இது ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியாவிற்கு கிடைத்த அடுத்த அதிர்ஷ்டம்! புள்ளப்பூச்சி மாதிரி இருந்தாளே! குடிபோதையில் புலம்பும் கோபி
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |