ஆட்டத்தை ஆரம்பித்த சாருபாலா.. கடுப்பில் கிளம்பிய குணசேகரன் - குழப்பத்தில் குடும்பத்தினர்!
ஆட்டத்தை ஆரம்பித்த சாருபாலாவிற்கு என்ன சரி செய்ய வேண்டும் என குணசேகரன் கோபமாக கிளம்பியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும், அடிமைத்தனத்தையும் அடிப்படையாக கொண்டு நகர்த்தப்படும் சீரியலாக எதிர்நீச்சல் பார்க்கப்படுகின்றது.
பல போராட்டங்களுக்கு பின் குணசேகரனின் ஆராஜகம் தலையோங்கியுள்ளது. இதனால் வீட்டிலுள்ள அனைவரும் குணசேகரன் மீது கடுப்பில் இருக்கிறார்கள்.
மேலும் அப்பத்தாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக கூறி பாம் வைத்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணையை ஜனனி - கதிர் ஆரம்பித்துள்ளார்கள்.
அப்பத்தாவை பிரிந்த சோகத்தில் வீட்டிலுள்ள மருமகள்களில் மூத்தவரான ஈஸ்வரி கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் ஊர் தேர்தலில் நிற்க வேண்டும் என குணசேகரன் வற்புறுத்தி ஈஸ்வரியை அழைத்து சென்று பெயர் பதிவு செய்துள்ளார்.
கடுப்பில் சென்ற குணசேகரன்
இவர்களுக்கு எதிரான சாருபாலாவும் பெயர் பதிவு செய்துள்ளார். அப்போது கடுப்பான குணசேகரன், “ அவர் தான் வெற்றி பெற போவதாகவும் சாருபாலாவிற்கு தோல்வி நிச்சயம் என்பது போல் பேசியுள்ளார்.
அமைதியாக இருந்து காரியத்தை சாதிக்க நினைக்கும் சாருபாலா ஈஸ்வரியிடம் வாழ்த்துக்கள் கூறி அனுப்பி வைக்கிறார். இருவரும் கடுமையாக மோதிக் கொள்வார் என எதிர்பார்த்த போது சாருபாலா தேர்தலிலிருந்து விலகியுள்ளார்.
இந்த செய்தி அறிந்த குணசேகரனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் தன்னுடைய தம்பிகளை அழைத்து கொண்டு வெளியில் செல்கிறார்.
ஆனால் வீடு திரும்பும் போது தம்பிகளும் குணசேகரனும் சந்தோசமாக வீடு திரும்புகிறார்கள். இது ரசிகர்களுக்கும் குடும்பத்தினருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |