காணாமல் போன தர்ஷினி.. கொதித்தெழுந்த குணசேகரன்- அடிதடியோடு ஆரம்பமான தேடுதல் வேட்டை
குணசேகரனின் மகள் தர்ஷினி காணாமல் போனதால் ஈஸ்வரி கவலையோடு அழுது கொண்டு தேடி வருகிறார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் என்றால் அது எதிர்நீச்சல் தான்.
இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.
எதிர்நீச்சலில் குணசேகரனுடைய கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து கடைசியாக வந்த ஜனனி வீட்டிலுள்ள அனைத்து பிரச்சினைகளைகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சக்தியின் ஆதரவோடு அனைத்து வேலைகளையும் பார்த்து வருகிறார்.
காணாமல் போன தர்ஷினி
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நாச்சியப்பன் குடும்பத்தினர் உள்ளே வந்து கதையை மாற்றியுள்ளனர்.
நாச்சியப்பன் அவரின் ஆத்தா பேச்சை கேட்டுக் கொண்டு ஜனனி அம்மாவின் தாலியை கழட்டி வாங்கியுள்ளார்.
இப்படியொரு நிலையில் குணசேகரன் தன்னுடைய மகள் தர்ஷினியை கரிகாலனுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றார்.
கரிகாலன், ஜான்சி இருவரும் சேர்ந்து கொண்டு தர்ஷினியை குணசேகரனிடம் வசமாக சிக்க வைத்து விட்டனர்.
இதனால் மனமுடைந்து பாடசாலைக்கு சென்ற தர்ஷினி இரவு வரை வீட்டிற்கு வரவில்லை. இவரை தேடி சென்ற ஈஸ்வரியும் தேடிக் கொண்டிருக்கிறார், ஆனாலும் தர்ஷினி கிடைக்கவில்லை.
இது ஒரு புறம் சென்றுக் கொண்டிருக்கையில் கரிகாலன் அவரின் திருமணம் பற்றி பேசுகிறார். இதனால் குணசேகரனுக்கு கோபம் வந்து விட்டது.
இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
குணசேகரன் இந்த சம்பவத்துடன் திருந்துவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |