ரேணுகாவிற்கு சப்ரைஸ் கொடுத்த ஜனனி: மறுபக்கம் சக்திக்கு ஏற்படும் ஆபத்து... பரபரப்பான ப்ரோமோ
எதிர்நீச்சல் தொடர் தற்போது விறுவிறுவிப்புக்கு பஞ்சம் இல்லாத அளவிற்கு சென்றுக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் இன்று வெளியானப் ப்ரோமோவில் சந்தோசம், துக்கம் என நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தான் இந்த கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கனிகா, மாரிமுத்து, சத்தியப்பிரியா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, சபரி பிரசாந்த், மதுமிதா, என ஒரு பெரிய பட்டாளமே தங்களுக்கு கொடுத்த கேரக்டரில் தொடர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார்கள்.
இந்த சீரியல் தான் தற்போது மற்ற சீரியல்களோடு போட்டிப் போட்டு கொண்டிருக்கிறது.
இன்றைய ப்ரோமோவில்
பல டுவிஸ்ட்டுகளும் ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் இன்றைய நாளுக்கா ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது. ஒரு பக்கம் ரேணுகாவின் பிறந்த நாளுக்காக ஜனனி ஒரு சிறப்பான பரிசு கொடுத்துக் கொண்டாடி சந்தோசமாக இருக்கிறார்கள்.
மற்றொரு பக்கம் சக்திக்கு திடீரென ஏதோ ஏற்பட அனைவரும் பதறி அடித்துக் கொண்டு ஓடும் காட்சிதான் இன்றைய நாளுக்கான ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |