ஆதிகுணசேகரன் இல்லாத எதிர்நீச்சல் வீட்டில் இடம் பெற்ற கொண்டாட்டம்... எல்லோரும் இவளோ அழகா இருகாங்க
எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் அனைவரும் எடுத்துக் கொண்டு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் தான் “எதிர்நீச்சல்” சீரியல் இந்த தற்போது ரசிகர்கள் மத்தியில் விறு விறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுத்திருக்கிறார் இயக்குனர் திருச்செல்வம். இந்த சீரியலில் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் அசத்தலான நடிப்பைக் கொடுத்து இந்த சீரியலை உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.
இந்த சீரியலில் அனைக்கும் பிடித்தமான மிரட்டலான நடிப்பைக் கொடுத்து ஆதிகுணசேகரன் என்கிற மாரிமுத்து கடந்த மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதனால் இந்த சீரியல் இலேசாக அடி வாங்கிய நிலையில் அவருக்கு பதிலாக நடிகர் வேலமூர்த்தி சீரியலுக்குள் நுழைந்தார். ஆனால் மாரிமுத்துவின் இடத்தை நிரப்புவதாக இல்லை என்று பலரும் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் அழகாக உடையணிந்து ஆயுத பூஜை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
இந்தப் புகைப்படத்தைப் பார்த்த அனைவரும் ஆதிகுணசேகரன் இல்லாத இந்த குடும்ப போட்டோ மனசை பிசைகிறது என கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |