Ethirneechal: சக்தியை புயலாக நெருங்கிய ஜனனி.... அன்புவின் சதியில் தர்ஷன்
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி சக்தி இருக்கும் இடத்தினை நெருங்கி செல்லும் நிலையில், அன்பு வீட்டிலிருந்து தனது வேலையைக் காட்டி வருகின்றனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் ஆட்டம் அதிகமாகிக் கொண்டே செல்கின்றது.
அறிவுக்கரசியினையும் சிறையிலிருந்து வெளியே எடுத்துள்ள நிலையில், தங்கையுடன் குணசேகரன் வீட்டில் தான் தங்கியுள்ளார்.

வீட்டு பெண்கள் தங்களுக்கு உண்மை தெரிந்தும் ஜனனிக்காக எதையும் கூறாமலும், குணசேகரன் செய்யும் சித்ரவதையை தாங்கிக் கொண்டும் இருக்கின்றனர்.
இதற்கிடையே அன்புக்கரசி தர்ஷனை தன்னுடன் வைத்துக் கொண்டு வில்லத்தனத்தினை காட்டி வருகின்றார். பார்கவி தர்ஷனை வெறுக்க வைக்கும் அளவிற்கு அன்பு வேலை செய்து வருகின்றார்.
இந்நிலையில் ஜனனிக்கு ஒரு தகவல் கிடைத்த நிலையில் சக்தியை தேடி புயலாக கிளம்பியுள்ளார். குற்றாலத்தில் சக்தி இருக்கும் இடத்தினை ஜனனி அடைந்துவிடுவாரா என்ற கேள்வி இருக்கின்றது.
இது ஒருபுறம் இருக்க குணசேகரன் கொட்டத்தினை அடக்குவதற்கு ராணா எப்பொழுது வருவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |