Baakiyalakshmi: செழியனுக்கு திருமண ஏற்பாடு செய்த ஈஸ்வரி! பாக்கியா கொடுத்த பதிலடி
பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி இரண்டாவது திருமண பேச்சை தொடர்ந்து பாட்டி செழியனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.
ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வந்த நிலையில் தற்போது எதிரியாக மாறி வருவதுடன், கோபிக்கு தனியாக உணவகம் ஒன்றினை வைத்து கொடுத்துள்ளார். இதனால் பாக்கியாவின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெனியின் தந்தை ஜெனிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கப்போவதாக கோபியிடம் கூறியதையடுத்து, தற்போது பாட்டியும் அதிரடியாக பிளான் செய்துள்ளார்.
பாக்கியா செழியனுக்கே தெரியாமல் இரண்டாவது திருமணத்திற்கு பெண் பார்க்க வரவழைத்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த பாக்கியா சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |