பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் என்னனு தெரியுமா?
இந்த அவசரமான கால கட்டத்தில் ஆண்களை விட பெண்களே அதிக வேலை செய்பவர்களாக காணப்படுகின்றனர். வீட்டையும் பார்க்க வேண்டும் குழந்தைகளையும் பார்க்க வேண்டும் வெளியிலும் வேலை செய்ய வேண்டும்.
இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த மறந்து விடுகின்றனர்.
இப்படி தன்னை வருத்தி கஷ்டப்படும் பெண்கள் உடலுக்கு ஏற்ற சக்தியை கொடுக்ககூடிய உணவுகளை உண்ண வேண்டும். அது எந்தெந்த உணவுகள் என்பதை இந்த பிதிவில் பார்க்கலாம்.
ஊட்டச்சத்து உணவுகள்
கீரையை அதிகளவில் உண்ண வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படும். இதனால் எலும்புகள் வலுவாக்கப்படும்.
பல ஊட்டச்சத்துக்கள் காணப்படும் பருப்பை பெண்கள் அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பருப்பை எடுத்து கொண்டால் அது அவர்களின் நலத்தில் மிகவும் நன்மை தரும்.
தினசரி உணவில் பெண்கள் ஓட்ஸ் எடுத்து கொள்ள வேண்டும். இதில் ஆரோக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்டவற்றையும் தன்னுள் அடக்கியுள்ளது.
பாலில் கால்சியம் நிறைந்து காணப்படுகின்றது. மற்றும் இதில் புரதம், பாஸ்பரஸ், பி வைட்டமின் காம்ப்ளக்ஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவையும் உள்ளன.
தினசரி உணவில் பால் எடுப்பது மிகவும் மக்கியமாகும். ப்ரோக்கோலி கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். எனவே ப்ரோக்கோலி காய்கறியை தினமும் எடுத்துக்கொண்டால் அது மிகவும் நன்மை தரும்.