கரை ஒதுங்கிய ராட்சத பொருள்! என்ன தெரியுமா? அருகில் சென்று பார்த்து தெறிச்சு ஓடிய நபர்
புகழ்பெற்ற தேம்ஸ் நதிக்கரையில் ராட்சச பாம்பு தோல் ஒன்று கரை ஒதுங்கியிருக்கும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆறு தேம்ஸ்.
இதன் வடக்கு பகுதியில் கடந்த ஆகஸ்டு 8 ஆம் தேதி இந்த பாம்பு தோல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஆற்றில் மூழ்கிப்போன விலையுயர்ந்த பொருட்களை கண்டுபிடிக்கும் தொழிலை செய்துவரும் ஜேசன் சாண்டி என்பவர் தேம்ஸ் நதியில் இறங்க சென்றிருக்கிறார்.

தேம்ஸ் நதியில் பாம்பு தோல்
அப்போது கரையில் 5 அடி நீளமுள்ள பாம்பு தோலினை அவர் பார்த்து உள்ளார்.
ஆரம்பத்தில் அது என்ன என்பது தெரியாமல் தவித்த ஜேம்ஸ், அது பாம்புத் தோல் தான் எனத் தெரியவந்தவுடன் திகைத்துப்போயிருக்கிறார்.
இந்த தோல் போவா கான்ஸ்டரிக்டர் எனும் பாம்பினுடையதாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இந்த வாகை பாம்புகள் மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவில் அதிக அளவில் காணப்படுகின்றன.