எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு...மணக்க மணக்க இனி செய்து ருசியுங்கள்
கத்தரிக்காயில் ஏராளமான நன்மைகள் நிறைந்திருக்கின்றது.
கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. கத்தரிக்காயில் நார்ச்சத்து மற்றும் நீர் சத்து இருப்பதால் எடை குறைக்க நினைப்பவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது. கத்தரிக்காய் குழம்பில் சாதம் பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
அந்த வகையில் கத்தரிக்காயை சுட்டு எண்ணெய் மணமணக்கும் குழம்பு வைத்து சாப்பிடுவது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கத்தரிக்காய் - 6
- காய்ந்த மிளகாய் - 10
- நல்லெண்ணெய் - 3 தேகரண்டி
- கடுகு - 1 தேகரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 தேகரண்டி
- கறிவேப்பிலை - சிறிதளவு
- புளி - எலுமிச்சை அளவு
- வெல்லம் - சிறு துண்டு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
கத்தரிக்காயை நன்கு கழுவி எடுத்து முழுசாக நெருப்பில் சுற்றிலும் காட்டி சுட வேண்டும்.
அதன் தோல் கருப்பாகி உதிர்ந்து விழும் வரை சுட வேண்டும்.
சுட்டதும் காய்ந்த மிளகாய்களையும் சுட்டு எடுக்க வேண்டும்,
பின் கத்தரிக்காய் மற்றும் காய்ந்த மிளகாய்களை அரைக்க வேண்டும்.
இப்போது கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு , உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். இப்போது அரைத்த கத்தரிக்காய் விழுது சேர்த்து புளி கரைத்து ஊற்ற வேண்டும்.
உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கொதிக்க வேண்டும்.
இறக்கும் முன் வெல்லம் சேர்த்து இறக்கிவிடுங்கள்.
அவ்வளவுதான் சுட்ட எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.