கம்பெனி கொடுக்க வற்புறுத்திய கணவர்... அதிரடியாக மனைவி எடுத்த முடிவு
கணவர் ஒருவர் தனது மனைவியை மது அருந்த கட்டாயப்படுத்திய நிலையில், குறித்த மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்து அதிரடியாக செயல்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள பெரிய காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரேவதி (28). இவருக்கும், சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் வெங்கடேஷ் பாபு என்பவருக்கும், கடந்த 2019-ம் ஆண்டு வெகு விமர்சையாக திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தின்போது 100 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக ரேவதியின் பெற்றோர் கொடுத்துள்ளனர்.
கணவன் வெங்கடேஷ் பாபுவுக்கு மது பழக்கம் இருந்து வந்ததோடு, மனைவியையும் குடிக்க சொல்லி டார்ச்சர் செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை உருவானது.
ஒருகட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் ரேவதி புதுச்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், 'எனது கணவர் வெங்கடேஷ்பாபு என்னுடைய தந்தை பெயரில் உள்ள வீட்டை எழுதி வைக்குமாறு கூறி தொடர்ந்து மிரட்டி வருகிறார்.
தன்னையும் மது அருந்த சொல்லி வற்புறுத்துகிறார். அதுமட்டுமல்லாமல், அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது' என்று புகாரில் தெரிவித்துள்ளார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.