முதல் டி20 போட்டி.. ஹெல்மேட்டில் கேமராவுடன் வந்த வீரர்.. ஹர்திக் பாண்டியாவின் வேகத்தில் வீழ்ந்த இங்கிலாந்து அணி!
இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டிக்கு பிறகு முதல் டி20 போட்டியை சவுதம்படனில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் அறிமுகமாகி உள்ளார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 24 ரன்களிலும், இஷான் கிஷன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய தீபக் ஹூடா 33 ரன்களும், சூரியகுமார் யாதவ் 39 ரன்களும் அடித்தனர். ஹர்திக் பாண்டியா 33 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். அக்சர் படேல் 17 ரன்னுடன் வெளியேறினார்.

கேமராவுடன் வந்த வீரர்
இந்த நிலையில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, மிகவும் எதிர்பார்த்த கேப்டன் பட்லர் 0 ரன்களில் புவனேஷ்வர் குமார் ஓவரில் வெளியேறினார்.
ஓரளவு ரன்கள் அடித்த மலானும் ஹர்திக் பாண்டியா ஓவரில் போல்ட் ஆக, ஜேசன் ராய் 4 ரன்களில் ஹர்திக் பாண்டியா ஓவரில் வீழ்ந்தார்.
இதனையடுத்து, ஹெல்மேட்டில் முதன் முறையாக கேமரா அணிந்தபடி வந்த லிவிங்ஸ்டன் வந்த வேகத்தில் 0 ரன்களில் பாண்டியா ஓவரில் அவுட் ஆகினார்.

இதனால், பெரிய ஸ்கோரை அடிப்பார் அந்த காமெராவில் பதிவாகி காணலாம், என்ற அவரின் ஆசைக்கு ஹர்திக் பாண்டிய முட்டுக்கட்டை போட்டு அனுப்பி வைத்தார்.
கடைசியாக இங்கிலாந்து அணி 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது. ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட், ஹர்ஷல் பட்டேல் 1 புவி 1 சாஹல் 2 என கைப்பற்றியுள்ளனர்.