காலை வெறும் வயிற்றில் என்னென்ன சாப்பிடனும் தெரியுமா?
காலை வெறும் வயிற்றில் என்னென்ன பொருட்களை சாப்பிட எடுத்துக் கொள்ளலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக காலையில் நாம் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும் பொருட்கள் அன்றைய நாளில் உங்களை அதிக சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ள உதவுகின்றது.
மேலும் நீங்கள் வெறும் வயிற்றில் சாப்பிடும் சில இயற்கை மருத்துவ பொருட்கள் பல உடல் உபாதைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகின்றது.
வெறும் வயிற்றில் இதை எடுத்துக்கோங்க
உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் இரவு இரண்டு சிட்டிகை வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
காலையில் எழுந்ததும் இளம் சூட்டில் இரண்டு டம்ளர் சுடுதண்ணீர் அருந்தினால் மலம் கழிப்பதை எளிதாக்கும். மலச்சிக்கலும் வராமல் இருக்கும்.
காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காயை தேனுடன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியத்தையும், தேவையற்ற கொழுப்பையும் குறைக்கும்.
இதே போன்று தேங்காய் பாலை காலை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள புண்கள் விரைவில் குணமாகும்.
காலையில் டீ காபி இவற்றினை வெறும் வயிற்றில் அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது அல்சர் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு பதிலாக கிரீன் டீ பருகலாம்.
காலையில் ஜீரண உறுப்புகள் மிகவும் சோர்வாக இருக்கும் நிலையில் மிகவும் காரமான உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். ஏனெனில் இது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
காலையில் உடல் சூட்டை தணிப்பதற்கு வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பது, பூண்டை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வது தவறாகும்.
காலையில் எழுந்ததும் வாயில் நல்லெண்ணெய் ஊற்றி ஆயில் புல்லிங் செய்தால் உடல் உபாதைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
பெரும்பாலும் காலையில் சிறு தானியக்கூழ், இட்லி, எண்ணெய் இல்லாமல் சுட்ட தோசை, கோதுமை தோசை, சத்துமாவு கரைசல் ஆகியவை காலை உணவுக்கு ஏற்றதுடன், உடம்பிற்கு உற்சாகத்தையும் அளிக்கும்.
வெறும் வயிற்றில் இந்த பொருட்களை எடுத்துக் கொண்ட பின்பு ஒன்றரை மணி நேரம் இடைவேளைவிட்டு காலை உணவை எடுத்துக் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |