பயன்படுத்திய பிபிஇ உடையை வெந்நீரில் அவித்து மறுவிற்பனை? கடும் சர்ச்சையை ஏற்படுத்திய அதிர்ச்சி காட்சி
மத்திய பிரதேசத்தில் மறு விற்பனைக்காக பிபிஇ உடைகளை ஊழியர்கள் சலவை செய்யும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிபிஇ உடையை ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு அப்புறப்படுத்திவிட வேண்டும்.
ஆனால், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவ கழிவுகளை அகற்றும் நிறுவன ஊழியர்கள் சிலர் மறுவிற்பனை செய்வதற்காக பிபிஇ உடையை சலவை செய்யும் வீடியோ சமூக ஊடகத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் சலவை செய்து விற்பனைக்காக ஏராளமான பிபிஇ உடைகள் தயாராக இருப்பதும் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உள்ளூர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
A shocking case of gross violation of #COVID19 protocols from Satna #COVID19 safety gears were being allegedly washed for resale, instead of destroying them @ndtv @ndtvindia @GargiRawat @manishndtv pic.twitter.com/BwMYflDgmQ
— Anurag Dwary (@Anurag_Dwary) May 27, 2021