13 கிலோ எடையை குறைத்தது எப்படி? எலான் மஸ்க் வெளியிட்ட ரகசியம்
தனது உடல் எடையை 13 கிலோகிராமினால் குறைத்த இரகசியத்தை உலகப் புகழ்பெற்ற செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகச்செல்வந்தர் எலான் மஸ்க்
அண்மையில் டுவிட்டரை கொள்வனவு செய்தமை காரணமாக மஸ்க் தொடர்பில் பல்வேறு பேச்சுக்கள் கூடுதலாக எழத் தொடங்கியது.
பல பில்லியன் டொலர்களுக்கு சொந்தக்காரரான மஸ்க், டுவிட்டரை கொள்வனவு செய்தமை முதல் அவரைப்ற்றிய பேச்சுக்கள் அதிகரித்துள்ளன.
தொழிற்துறை விடயங்களுக்கு அப்பால், மஸ்க் தனது உடல் எடையை குறைத்துக் கொண்டுள்ளமை பற்றியும் தற்பொழுது பேசப்பட்டு வருகின்றன.
எடையை குறைந்த எலான் மஸ்க்
மஸ்க் 13 கிலோ கிராம் எடையை குறைத்துக் கொண்டுள்ளார். உணவு தவிர்ப்பு மற்றும் சுவையான உணவு தவிர்ப்பு ஆகிய இரண்டு கலவைகளின் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என மஸ்க் தெரிவித்துள்ளார்.
நீரிழிவிற்காக பயன்படுத்தப்படும் Ozempic/Wegovy ஆகியனவற்றை பயன்படுத்துவது உடலுக்கு தீங்கு ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார்.
What’s made the most difference
— Tesla Owners Silicon Valley (@teslaownersSV) November 16, 2022
உணவு தவிர்ப்பு + Ozempic/Wegovy + சுவையான உணவுகளை தவிர்த்தல் ஆகிய சமன்பாட்டின் ஊடாக உடல் எடையை குறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பயனர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்கின் இந்த ஆலோசனையை முழுமையாக பின்பற்றுவதற்கு முன்னதாக மருத்துவரின் ஆலோசனை பெற்றுக் கொள்வது உசிதமானது என தெரிவிக்கப்படுகின்றது.
You’ve lost a ton of weight, Elon! Keep up the fantastic work! ?? pic.twitter.com/uJhdxWUWqB
— ✨Chicago✨ (@chicago_glenn) November 16, 2022