டுவிட்டரை வாங்கினார் எலான் மஸ்க்! கையில் கொண்டு சென்ற ஆச்சரியமான பொருள்
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், 44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.
டுவிட்டருடன் ஒப்பந்தம்
கடந்த ஏப்ரல் மாதத்தில் டுவிட்டரின் 9.2 சதவீத பங்குகளை விலைக்கு வாங்கிய எலான் மஸ்க், டுவிட்டரை முழுமையாக வாங்க விருப்பம் தெரிவித்தார்.
ஒரு பங்குக்கு 54.20 டொலர் என்ற வீதத்தில் மொத்தமாக 44 பில்லியன் டொலர் தருவதாக ஒப்பந்தமும் போடப்பட்டது.
இதற்கு டுவிட்டர் ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது, இதற்கிடையே போலி கணக்குகள் குறித்த விவரத்தை டுவிட்டர் வழங்கவில்லை எனக்கூறி பின்வாங்கினார் எலான் மஸ்க்.
ஒப்பந்தத்தை தட்டிக்கழிக்க எலான் மஸ்க் திட்டமிடுவதாக குற்றம்சாட்டப்பட்டு, நீதிமன்றத்தில் டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் அக்டோபர் 28க்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்யுமாறு எலான் மஸ்க் உத்தரவிட்டது.
இந்நிலையில், தற்போது எலான் மஸ்க் 44 பில்லியன் டொலருக்கு டுவிட்டரை முழுமையாக வாங்கியுள்ளார்.
நேற்று எலான் மஸ்க் சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள டுவிட்டரின் தலைமையகத்திற்கு சென்ற போது, கையில் கை கழுவ பயன்படுத்தப்படும் தொட்டி ஒன்றை சுமந்து சென்று ஆச்சரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்க் டுவிட்
இவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், சமூகவலைத்தளங்களில் வலதுசாரிகளும், இடதுசாரிகளும் வெறுப்பை வளர்த்து வருகின்றனர், இந்த போக்கை ஊக்குவித்தால் தான் பணம் வரும் என நிறுவனங்கள் நம்புகின்றன.
இதனால் ஆரோக்கியமான உரையாடல் காணாமல் போகிறது, எதிர்கால சந்ததியினருக்காக ஆரோக்கியமான உரையாடலை நடைபெற ஒரு தளம் தேவை என நாம் நினைத்தேன், இதற்காக தான் டுவிட்டரை வாங்கியுள்ளேன், பணம் சம்பாதிக்க அல்ல என தெரிவித்துள்ளார்.
டுவிட்டரை வாங்கியவுடனே, சிஇஓ பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் ஆகியோரை பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Dear Twitter Advertisers pic.twitter.com/GMwHmInPAS
— Elon Musk (@elonmusk) October 27, 2022