நாசா வெளியிட்ட பிரபஞ்சத்தின் அழகிய புகைப்படத்தை கிண்டலடித்த எலான் மஸ்க் - என்ன இப்படி சொல்லிட்டாரு?
அண்மையில், நாசா நிறுவனம் பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தை காட்டு விதமாக ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தது.
இந்த புகைப்படத்தை உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ரசித்தாலும், சிலர் இதில் என்ன அப்படி தெரிகிறது என கிண்டலடிக்கும் விதமாக கருத்துகளையும், மீம்ஸ்களையும் தெறிக்கவிட்டனர்.

அந்த வகையில், டெஸ்லா நிறுவனரான உலகின் கோடீஸ்வரரான எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் நாசா நிறுவனத்தை கலாய்த்தப்படி வெளியிட்ட புகைப்படம் தான் நெட்டிசன்களால் பேசப்பட்டு வருகிறது.

அதன்படி அவர் வெளியிட்ட புகைப்படத்தில், Nice try nasa என கேப்ஷனில், வீட்டு சமையலறையில் உள்ள டைல்ஸில் மினுப்பதை குறிப்பிட்டு அதேப்போல் உள்ளது என கிண்டலடிக்கும் விதமாக வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது நெட்டிசன்களால் பகிரப்பட்டு பலரும் பலவிதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
— Elon Musk (@elonmusk) July 15, 2022