மனிதனின் மூளையை கட்டுப்படுத்தும் சிப் - எலான் மஸ்க்கின் நியூரோலிங்க் கைகொடுக்குமா?
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தொழில்நுட்ப வளர்ச்சியில் வித்தியாசமானதை புகுத்தகூடியவர்.
ஏற்கனவே டெஸ்லார் கார், செயற்கைக்கோள்களை இலக்கிற்கு அனுப்பி விட்டு பூமிக்கு திரும்பும் ராக்கெட்டுகளை தயாரிக்கும் ஸ்பேஸ் எக்ஸ், மற்றும் சாட்டிலைட் மூலம் மொபைல் போன்களை இயங்க வைக்கும் திட்டம் என பல வழிகளில் செயல்பட்டு வருகிறார்.
அந்தவகையில், மனிதனின் மூளையில் சிப் ஒன்றைப் பொருத்தி அதன் மூலம் மனிதனையும் இயந்திரங்களையும் இணைக்கும் தொழில்நுட்பத்தை கண்டுப்பிடிக்க நியூராலிங்க் நிறுவனம் வெற்றிகரமாக சோதித்து வருகிறது.
இந்த நியூராலிங்க் திட்டமே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர், விரல்களை கொண்டு ஸ்மார்ட்ஃபோனை இயக்குபவரை விட வேகமாக ஸ்மார்ட்ஃபோனை இயக்க வைக்க நியூராலிங்கின் முதல் தயாரிப்பு உதவும் எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார்.

முக்கிய அம்சம்
இந்த சிப்பின் முக்கியம் அம்சம் என்ன என்றால், முதுகுதண்டுவடத்தில் ஏதேனும் காயங்கள் இருந்தாலும் அதை முற்றிலும் குணப்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
எனவே இது முற்றிலும் பாதுகாப்பானது. இதை தேவைப்படாவிட்டால் பாதுகாப்பாக நீக்கிவிடலாம். மண்டை ஓட்டில் கொஞ்சம் சதையுடன் சேர்த்து வைக்கப்படும் இந்த சிப் வயர்லஸ் சார்ஜ் மூலம் சார்ஜ் செய்யலாம்.
இந்த சிப் பொருத்தப்பட்டவர் இயல்பாக இருப்பதை உணருவார்கள். வருங்காலத்தில் இப்படி ஒரு சிப் தான் மனிதனை ஆளும் என்பதில் சந்தேகமில்லை என வல்லுனர்களும் கூறி வருகின்றனர்.