ஒரே ஒரு ட்விட்.. ஒரு லட்சம் கோடியை இழந்த எலான் மஸ்க்; இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட காரணம் என்ன?
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உலகின் நெம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க். இவர் தற்போது அந்த அந்தஸ்த்தை இழந்துள்ளார். இதற்கு காரணம் ஒரே நாளில் அவரது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் கண்ட வீழ்ச்சி தான் என தெரிந்துள்ளது. அதனால் ஒரே நாளில் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை மஸ்க் இழந்துள்ளார்.
மேலும், இவர் செய்த ட்விட்டர் பதிவில், “பணத்தை விட பிட்காயினே மேல்” என ட்வீட் மூலம் தெரிவித்திருந்தார் மஸ்க். அது தான் அவரது சரிவிற்கு காரணம் என கண்டறியப்பட்டுளள்து. தற்போது, 183.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். அமேசான் நிறுவனர் ஜெப் பெஸாஸ் 186.3 பில்லியன் சொத்து மதிப்புடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
According to @elonmusk "Bitcoin is almost as BS as fiat money." So Musk regards both #Bitcoin and fiat as BS. I agree, I just think Bitcoin, which is digital fiat, is even more BS than the paper fiat issued by central banks. #Gold is not BS. It's real money and better than both!
— Peter Schiff (@PeterSchiff) February 19, 2021