பாரிய தீ விபத்து ஏற்பட்டுவிட்டதா? ஒரே ஒரு பந்து செய்யும் அற்புதம்
பாரிய தீவிபத்தினை ஒரே ஒரு பந்தினால் கட்டுப்படுத்த முடியும் என்பதை Lide Fire என்ற நிறுவனம் விளக்கியுள்ளது.
இன்றைய காலத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தீ விபத்து என்பது தவிர்க்க முடியாததாகி உள்ளது.
பல இடங்களில் தீ விபத்தினால் உயிரிழப்பு ஏற்படுவதை நாம் கேள்விப்பட்டு வருகின்றோம். தீயணைப்ப வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரும் முன்பு விபத்து கடும் தீவிரமாகிவிடுகின்றது.
இந்நிலையில் LIDE FIRE ® Extinguishing ball என்ற நிறுவனம் தீயை அணைக்க பந்து போன்ற பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த 1.3 கிலோ எடையுள்ள பந்திற்குள், தீயை அணைக்க பயன்படும் ரசாயன கலவை நிரப்பி வைக்கப்படுகிறது.
வீடு, அலுவலகம், கார் என எந்த இடத்தில் தீ பிடித்தாலும், தீ விபத்திற்கு முன்னர் இந்த பந்தை பொருத்தி வைத்திருந்தால், தீயின் வெப்பம் லேசான அளவு அதிகரிக்கும் போது பந்தில் இருந்து வெளியேறும் ரசாயன கலவை தீயை அணைக்கிறது.
சாதாரண தீ விபத்து, பெட்ரோல் டீசல் இவற்றினால் ஏற்படும் தீ விபத்து, மின் இணைப்பினால் ஏற்படும் தீவிபத்து என அனைத்திற்கும் தீர்வு அளிக்கின்றதாம்.